சதியொன்றை ஏற்படுத்துவதற்காகவா கோட்டாபய அமெரிக்கா சென்றார்?

அமெரிக்க புலனாய்வுத் துறையினருடன் இணைந்து நாட்டில் சதியொன்றை ஏற்படுத்துவதற்கா கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றார்? என்பதை ஆராயவேண்டியிருப்பதாக அமைச்சர் ஹர்ஷ.டி.சில்வா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அமெரிக்காவுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்துள்ளமை இது தொடர்பான சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடு குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது.

இதில் உரையாற்றிய உதய கம்மன்பில, அமெரிக்காவின் ஹெரிட்டேஜ் என்ற அமைப்பு தமது கட்சி ஆட்சிக்கு வரும் என எதிர்வு கூறியிருப்பதாகத் தெரிவித்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் ஹர்ஷ.டி.சில்வா இந்த சந்தேகத்தைவெளியிட்டார்.

எப்பொழுதும் அமெரிக்காவுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கும் உதய கம்மன்பில முதல் தடவையாக அமெரிக்காவை பாராட்டும் வகையில் கருத்துக் கூறியுள்ளார். ஹெரிடேஜ் என்பது அமெரிக்காவில் ஆட்சியிலுள்ள வலதுசாரிக் கட்சிக்கு ஆதரவான

அமைப்பாகும். அப்படியாயின் அமெரிக்கப் பிரஜாவுரிமைகொண்ட கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்காவின் வலதுசாரிக் கட்சியுடன் தொடர்பைக் கொண்டுள்ளாரா? என்றும் அமைச்சர் கேள்வியெழுப்பினார். ஒருவருக்கு இரட்டைப் பிரஜாவுரிமை இருந்தால் அமெரிக்கப் பிரஜாவுரிமைக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

அந்த அடிப்படையில் அமெரிக்கப் பிரஜாவுரிமை கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ அமெரிக்கா சென்றிருப்பது அந்நாட்டு புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து நாட்டில் சதியை ஏற்படுத்துவதற்கா என்பது ஆராயப்பட வேண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Sat, 04/06/2019 - 06:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை