பல்கலைக்கழகங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதால் நன்மை

வெளிநாட்டு மாணவர்கள், இலங்கை பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான இட ஒதுக்கீட்டை உரியமுறையில் வழங்குவதால் அநேக நன்மைகள் உள்ளதாக நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.  

அண்மையில், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பட்டதாரி கற்கை நெறிகளுக்கான புதிய கட்டடத் தொகுதியை திறந்துவைக்கும் நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.  

இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாக பங்கேற்றார்.  

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ஹக்கீம்,  ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்குமான அனுமதியில் 4.5வீதமான வெளிநாட்டு மாணவர்களை உள்வாங்க முடியும். கொழும்பு பல்கலைக்கழகத்தைத் தவிர, இதர பல்கலைக்கழகங்கள் இதனை சரிவர பயன்படுத்துவதில்லை.  

வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துகொள்வதால் சர்வதேச ரீதியான பல்கலைக்கழகங்களின் தரப்படுத்தலிலும் முன்னேற்றம் காணப்படலாம். கொழும்பு பல்கலைக்கழகம், மருத்துவபீடத்துக்கு மாலைத்தீவைச் சேர்ந்த10மாணவர்களை அனுமதிக்கின்றது.  

அத்துடன் கொழும்பு பல்கலைக்கழகம் சுய முயற்சியால் பட்டப்படிப்புக்கான புதிய கட்டடத் தொகுதியை நிர்மாணிப்பதற்கு சொந்தநிதியிலிருந்து பெருந்தொகை பணத்தை செலவிட்டிருப்பது பாராட்டத்தக்கது.   தற்போதைய அரசாங்கம் உயர் கல்வியை மேம்படுத்துவதற்கு கூடுதலான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. கடந்த நான்காண்டு காலப்பகுதியில் புரட்சிகரமான மாற்றங்கள் பல ஏற்பட்டுள்ளன என்றார்.   

Wed, 04/10/2019 - 08:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை