எகிப்தில் பண்டைய எலி மம்மிகள் கண்டுபிடிப்பு

எகிப்தின் சோஹா நகரில் அலங்கரிக்கப்பட்ட பண்டைய கல்லறை ஒன்றில் பதப்படுத்தப்பட்ட (மம்மி) எலிகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இரு மனித மம்மிகளுடன் எலி மற்றும் ஏனைய விலங்குகளின் உடல்களுடன் காணப்பட்ட அந்த அடக்கவறை சுவர்களில் இறுதிக் கிரியையின் சித்திரங்கள் இருந்துள்ளன. 2000 ஆண்டுகள் பழமையான இந்தக் கல்லறையில் டுடு என்ற சிரேஷ்ட அதிகாரி மற்றும் அவரது மனைவியின் உடல்கள் இருந்ததாக நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொள்ளைக்காரர்கள் சட்டவிரோதமாக தோண்டும் வேலையில் பிடிபட்டதை அடுத்தே இந்தக் கல்லறை கடந்த ஒக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எகிப்து தலைநகர் கெய்ரோவிலிருந்து சுமார் 390 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பாலைவன பகுதியான இது, இனி சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாட்டின் மற்றொரு பகுதியாக உருவெடுக்கும் என்று அந்நாட்டின் தொல்லியல் துறை நம்புகிறது.

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை