நடுக்கடலில் வீடு கட்டியவர் மரண தண்டனைக்கு வாய்ப்பு

தாய்லாந்து கடலில் வீடு ஒன்றை கட்டிய அமெரிக்க நாட்டவர் ஒருவர் மற்றும் அவரது காதலி மரண தண்டனைக்கு முகம்கொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் நாட்டின் இறைமைக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக கடற்படையினர் குற்றம்சாட்டியதை அடுத்து சாட் எட்வடோஸ்கி மற்றும் அவரது காதலி தலைமறைவாகியுள்ளனர்.

இவர்களது வீடு தாய்லாந்தின் புகெட் கரையில் இருந்து 19 கிலோமீற்றர் தொலைவில் கடலுக்கு மேலால் 20 மீற்றர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் தாய்லாந்து நாட்டுக்கு அப்பாலுள்ள கடற்பகுதியிலேயே தமது வீடு அமைந்திருப்பதாக எட்வடோஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

“கடலுக்கு மேலால் கொன்கிரீட் டாங்கி ஒன்று மிதப்பதை தமகு குழுவும் கடற்படையினரும் கண்டுபிடித்தபோதும் அதில் எவரும் இருக்கவில்லை” என்று தாய்லந்து பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வீட்டை கட்டுவதற்கு அந்த ஜோடி தாய்லாந்து நிர்வாகத்திடம் அனுமதி பெறவில்லை என்று கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். தாய்லாந்து இறைமையை மீறியதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் இந்த ஜோடிக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை கூட விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

Fri, 04/19/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை