வெலே சுதாவுக்கு மரண தண்டனை மீண்டும் உறுதி

மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப்படுத்தியது

வெலே சுதா என்றழைக்கப்படும் சர்வதேச போதைப்பொருள் வர்த்தகரான சமந்த குமாராவின் மரண தண்டனையை மேன்முறையீடு நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.  

சட்டத்துக்குப் புறம்பான வகையில் மேல்நீதிமன்றம் தனக்கு மரண தண்டனை விதித்துள்ளதாக வலியுறுத்தி வெலே சுதா தாக்கல் செய்திருந்த மனு மீதான வழக்கு, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான அச்சல வெங்கப்புலி மற்றும் தீபாலி விஜேசுந்தர ஆகியோர் முன்னிலையில் நேற்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.  

2008ஆம் ஆண்டு கல்கிசை பிரதேசத்தில் 7.05கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட

வெலே சுதாவுக்கு 2015 ஆம் ஆண்டு கொழும்பு மேல் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.    இந்த தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் வெலே சுதா மனுவொன்றை தாக்கல் செய்தார். அதனை பரிசீலனைக்கு உட்படுத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம், மேல்நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பை ஊர்ஜிதப்படுத்தி தீர்ப்பளித்தது. 

(சுப்பிரமணியம்   நிஷாந்தன்)

Sat, 04/06/2019 - 08:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை