பிறக்கும் குழந்தைக்கும் தனித்துவ இலக்கம்

டிஜிற்றல் அரசாங்க முறை விரைவில் ஆரம்பம்

அரச சேவைகளைப் பொது மக்கள் இலகுவாகவும், வினைத்திறனுடனும் பெற்றுக்கொள்ள டிஜிற்றல் அரசாங்க (Digital government) முறைமையை அறிமுகப்படுத்துவதற்கான அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதன்மூலம் அரச திணைக்களங்களில் இடம்பெறும் ஊழல் - மோசடிகள் தடுக்கப்படும் என்பதுடன், சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கான பொது மக்களின் செலவுகளும் குறைவடையும் என்று தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.

டிஜிற்றல் அரசாங்க முறையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒவ்வொரு தனிநபருக்கும் தேசிய தனித்துவ இலக்கமொன்று வழங்கப்படும். 2019ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் பிறந்துள்ள அனைத்துக் குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழுடன் தேசிய தனித்துவ இலக்கம் பதியப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் இங்கு சுட்டிக்காட்டியதாவது,

மேற்குலக நாடுகளைப் போன்று வளர்ச்சி கண்டுள்ள தொழில்நுட்ப முறைகளை எமது நாட்டில் அறிமுகப்படுத்தி பொது மக்கள் அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதை மிகவும் இலகுவானதாக மாற்றியமைக்கும் புரட்சிகர வேலைத்திட்டங்களை இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக அரச சேவைகளை டிஜிட்டல் மயப்படுத்தும் டிஜிட்டல் அரசாங்க முறைமை எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளது. தனியார் துறையினருக்கும் இந்த டிஜிட்டல் முறைமை பொருந்தும். அரச சேவை தனியார் துறையுடனும் தொடர்புடையதாகவே காணப்படுகிறது. ஆகவே, அதனை தொழில்நுட்ப முறைமையின் கீழ் மாற்றியமைப்பது கட்டாயம். இதன்மூலம் பாரிய பொருளாதார வளர்ச்சியையும் எட்ட முடியும். பல வருடங்களாக பத்திர வடிவில் ஆவணங்களை வைத்திருக்கவும் தேவையில்லை.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை