பெடரர் இறுதிப் போட்டிக்கு தகுதி

அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் போட்டித் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, சுவிஸ் நட்சத்திரம் ரொஜர் பெடரர் தகுதி பெற்றார்.

அரை இறுதியில் கனடாவின் இளம் வீரர் டெனிஸ் ஷபோவலாவுடன் (19 வயது, 23ஆவது தரம்்) மோதிய பெடரர் (37 வயது, 5ஆவது தரம்்) 6–2 , 6–4 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது.

மியாமி ஓபனில் 3 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ள பெடரர், 5ஆவது முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு அரை இறுதியில் நடப்பு சாம்பியனான ஜோன் ஐஸ்னர் (அமெரிக்கா) 7–6 (7–3), 7–6 (7–4) என்ற நேர் செட்களில் 1 மணி, 53 நிமிடம் போராடி வென்றார். இறுதிப் போட்டியில் பெடரர் – ஐஸ்னர் மோதுகின்றனர்.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை