உலகெங்கும் தட்டம்மை நான்கு மடங்கு அதிகரிப்பு

உலகெங்கும் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் தட்டம்மையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சுமார் 4 மடங்கு அதிகரித்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு அந்த நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டது.

இந்த ஆண்டு ஜனவரி தொடக்கம் மார்ச் வரை 112,000 தட்டம்மைத் தொற்றுச் சம்பவங்கள் உலகம் முழுவதும் பதிவானபோதும், மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியாக ஆபிரிக்கா உள்ளது. அங்கு தட்டம்மைத் தொற்றுச் சம்பவங்கள் 700 வீதமாக அதிகரித்துள்ளன.

அந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு கூறியது.

ஆபிரிக்காவிற்கு அடுத்தபடியாக, உக்ரைன், மடகாஸ்கார், இந்தியா ஆகியவை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

தட்டம்மை மிக விரைவில் தொற்றக்கூடிய தன்மை கொண்டது. சில நேரங்களில் அதனால் நுரையீரல், மூளை ஆகியவையும் மோசமாகப் பாதிக்கப்படலாம்.

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை