கிம் ஜொங் நாம் கொலை: வியட்நாம் பெண்ணுக்கு சிறை

வட கொரியத் தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரர் கிம் ஜோங் நாம்மின் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட வியட்நாமியப் பெண்ணுக்கு, 3 ஆண்டு 4 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் கிம்மை நச்சு இரசாயனம் கொண்டு தாக்கியதாக வியட்நாமியர் டோன் தி ஹுவோங் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

மரண தண்டனைக்குப் பதிலாகக் குறைவான தண்டனையை விதிக்குமாறு அந்தப் பெண் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். அவர் மீது சுமத்தப்பட்டிருந்த கொலைக் குற்றச்சாட்டை மலேசிய அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் நேற்றுக் காலை கைவிட்டனர்.

2017ஆம் ஆண்டு, குமாரி டோன் தடுத்து வைக்கப்பட்டார். நன்னடத்தை காரணமாகத் தண்டனைக் காலம் முடிந்து அடுத்த மாதமே அவர் விடுதலை செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவருடன் அந்தக் குற்றத்தைப் புரிந்ததாக முன்னர் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கிய மலேசியப் பெண், கடந்த மாதம் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

வட கொரிய உளவு பிரிவினர் மேற்கொண்ட படுகொலைச் சதித் திட்டத்தில் அந்த இரு பெண்களும் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்பட்டதாக அவர்களின் வழக்கறிஞர்கள் கூறிவருகின்றனர்.

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை