பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரியவை நியமிக்க அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

RSM
பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரியவை நியமிக்க அரசியலமைப்பு சபை அங்கீகாரம்-AG Jayanath Jayasuriya Appointed AS CJ-Auditor General Chulantha Wickramaratne

கணக்காய்வாளர் நாயகமாக சூலந்த விக்ரமரத்னவின் பெயர் பரிந்துரை

புதிய பிரதம நீதியரசராக சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவையும் புதிய கணக்காய்வாளர் நாயகமாக, மேலதிக கணக்காய்வாளர் சூலந்த விக்ரமரத்னவையும் நியமிக்க அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.

அரசியலமைப்பு சபை இன்று (26), சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியது.

அதற்கமைய புதிய பிரதம நீதியரசராக (Chief Justice) சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரியவின் (Attorney General) பெயரை அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அங்கீகாரம் அளித்துள்ளது.

அத்துடன் புதிய கணக்காய்வாளர் நாயகமாக (Auditor General), மேலதிக கணக்காய்வாளர் சூலந்த விக்ரமரத்ன பெயரை ஒருமனதாக அரசியலமைப்பு சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிய பிரதம நீதியரசர் மற்றும் கணக்காய்வாளர் ஆகியோரை நியமிப்பது தொடர்பில் ஜனாதிபதியினால் அனுப்பப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் ஆராய்ந்த அரசியலமைப்பு சபை குறித்த முடிவை ஏகமனதாக எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த நியமனங்களை வழங்குவது தொடர்பில் அவர்களது பெயர்கள் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

Fri, 04/26/2019 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை