ஆளும் இராணுவ கெளன்சிலுக்கு எதிராகவும் சூடானில் ஆர்ப்பாட்டம்

சூடான் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரை வெளியேற்றிய ஆளும் இராணுவ கெளன்சிலுடனான தொடர்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் துண்டித்துள்ளனர்.

பஷீர் அரசுடன் தொடர்புபட்டவர்களை இணைத்ததாக புதிய நிர்வாகம் இருப்பதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கார்டூம் நகரின் இராணுவத் தலைமையகத்திற்கு முன்னால் ஒன்று திரண்ட ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள், சிவில் நிர்வாகம் ஒன்று ஆட்சியை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அதிகாரத்தை கையளிக்க இராணுவம் ஒப்புக்கொண்டபோதும் இராணுவம் மற்றும் சிவிலியன்களை இணைத்த நிர்வாகம் ஒன்று பற்றி ஆலோசிப்பதாக அறிவித்துள்ளது.

எனினும் இந்த இராணுவ நிர்வாகம் முந்தைய ஆட்சியின் நீடிப்பாக இருப்பதாக குறிப்பிட்டிருக்கும் ஆர்ப்பாட்ட அமைப்பின் பேச்சாளர் முஹமது அல் அமின், ஆர்ப்பாட்டங்களை தொடர்வதாக உறுதி அளித்துள்ளார்.

பஷீரை பதவி நீக்கும் ஆர்ப்பாட்டத்தில் சூடான் தொழில் வல்லுநர்களின் சங்கம் தலைமை வகித்ததோடு சிவில் கெளன்சில் அறிவிப்பும் அதற்கு பின்னணியாக உள்ளது.

இந்த சங்கம் கடந்த சனிக்கிழமை இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை