பலத்த காற்றுடன் கூடிய காலநிலை

நாடு முழுவதும் இன்றும் நாளையும் பலத்த காற்றுடன் கூடிய நிலைமை காணப்படும் என, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மணித்தியாலத்துக்கு 60கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

அத்தோடு, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.

சப்ரகமுவ, மத்திய, தென், மேல், மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 150மில்லிமீற்றருக்கும்  அதிகமான  மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஏனைய பகுதிகளில்  சில இடங்களில்100மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு கிழக்காக விருத்தியடைந்த சூறாவளியான போனி (குயுNஐ)இ நேற்று (28) முற்பகல் 11.30மணி முதல் வட அகலாங்கு 8.4N இற்கும் கிழக்கு நெடுங்கோடு 86.9நு இற்கும் அருகில் மட்டக்களப்பிற்கு கிழக்காக ஏறத்தாழ 580கிலோமீற்றர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இது அடுத்த 12மணித்தியாலங்களில் ஒரு பலத்த சூறாவளியாக மாறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இது நாளை  முதலாம் திகதி வடமேற்குத் திசையில் இலங்கையின் கிழக்குக் கரையை விட்டு விலகி நகரக்கூடும் என்பதோடு, அதன் பின்னர் மீண்டும் படிப்படியாகத் திரும்பி வடகிழக்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

ஆகவே, பொதுமக்களும் கடலில் பயணம் செய்வோரும் மீனவச்  சமூகத்தினரும் முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Tue, 04/30/2019 - 08:38


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை