விபச்சாரத்திற்கு எதிராக நெதர்லாந்தில் விவாதம்

விலைமாதுக்களிடம் செல்வதை சட்டவிரோதமாக்கும் மனு ஒன்று நெதர்லாந்து பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

42,000 இளைஞர், யுவதிகள் இந்த மனுவில் கைச்சாத்திட்டிருக்கும் நிலையில் இந்த விவகாரம் பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. பணத்திற்காக பாலியல் உறவு தொடர்பில் நெதர்லாந்து உலகில் மிக இலகிய சட்டத்தை கடைப்பிடிக்கிறது.

கிறிஸ்தவ செல்வாக்குக் கொண்ட எக்ஸ்போஸ் என்ற இளைஞர் அமைப்பு ஒன்றே இந்த கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டுள்ளது. எனினும் 40 ஆயிரம் கையெடுத்துகளை பெறுவதற்கு அந்த அமைப்புக்கு ஆறு ஆண்டுகள் தேவைப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

விபச்சாரம் தொடர்பில் சுவீடன் பின்பற்றும் கொள்கையை கடைப்பிடிக்க இவர்கள் அழுத்தம் கொடுக்கின்றனர். சுவீடனில், பாணத்திற்காக பாலியல் தண்டனைக்குரியது என்பதோடு விபச்சாரத்திலிருந்து விடுபடும் பெண்களுக்கு அரசு உதவுகிறது.

நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் சிவப்பு விலக்கு பகுதி அதிக பிரபலமான இடமாகும். அங்கு விலைமாதுகள் கண்ணாடி பெட்டிகளில் காட்சி அளிக்கின்றனர்.

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை