வெப்பத்தின் தாக்கம்

எமது சின்னஞ்சிறு வயதில்  சிங்கக் குகை பற்றிய கதைகளை ஆவலுடனும், பிரமிப்புடனும்  படித்திருப்போம். அவ்வாறே நாயொன்றும் குகை அமைத்து உறங்கும் காட்சியை யாழ். பல்கலைக்கழகத்தில் தற்போது காணக்கூடியதாக உள்ளது. தற்போது நிலவும் வெப்பமான காலநிலையே இந்நிலைமைக்குக் காரணமாகும்.

இலங்கையில் 140வருடங்களுக்கு பின்னர் வெப்பத்தின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்படுவதோடு, இவ்வெப்பமான காலநிலைக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் உயிரினங்களும் அல்லற்படுகின்றன.

அவ்வாறே நாயொன்றும் இவ்வெப்பமான காலநிலைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல், யாழ். பல்கலைக்கழகத்திலுள்ள  மண்மேடொன்றில் சிறிய குகையொன்றை தன் கால்களினால் அமைத்து அதில் ஒய்யாரமாக உறங்குகின்றது.

வெப்பமான காலநிலை மனிதர்களை மட்டுமல்லாது,  விலங்குகளையும் பாடாய் படுத்துகின்றது என்பதனை இப்படங்கள் எடுத்துக் காட்டுகின்றன.

(பாறுக் ஷிஹான் -புங்குடுதீவு குறுப் நிருபர்)

Tue, 04/16/2019 - 12:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை