உதைபந்தாட்டத்தில் ஓரினச்சேர்க்கை அவதூறு பெட்ரிக் எவ்ராவுக்கு எதிராக மனித உரிமை வழக்கு

உதைபந்தாட்டத் துறையில் ஓரினச் சேர்க்கை செயற்பாடுகளையும், அவதூறுகளையும் தடுக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று உதைபந்தாட்டத்தில் ஓரினச் சேர்க்கை ஆர்வத்திற்கு எதிராக போராடும் பிரான்ஸ் அமைப்பின் ரோஜ் டிரெக் என்பவர் தெரிவித்துள்ளார்.

இந்த அமைப்பு துறைசார்ந்த வீரர்கள் தொடர்பாக தனது ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

அந்தவகையில், மென்செஸ்டர் யுனைட்டட்டின் முன்னாள் வீரர் பெட்ரிக் எவ்ரா, பாரிஸ் சென்ட். ஜெர்மைன் வீரர்களை சமூக ஊடகங்களில் ஓரினச் சேர்க்கை அவதூறுக்கு உட்படுத்தியதாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.

பாரிஸ் சென்ட். ஜெர்மைன் அணி சம்பியன்ஸ் லீக் தொடரில் யுனைட்டட் அணியிடம் நொக்கவுட் ஆகிய பின்னரே அவர் அவதூறுகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ரோஜ் டிரெக் மற்றும் OS Homophobie குழுவின் முறைப்பாடுகளுக்கு அமைவாக பாரிஸ் சட்டவியலாளர்கள் எவ்ரோவுக்கு எதிரான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தநிலையில் ஓரினச் சேர்க்கை கலாசாரம் விளையாட்டுத்துறையின் ஒரு பகுதியாக உள்ளது என்று கடந்த வாரம் தெரிவித்திருந்த பிரான்ஸின் உத்தியோகபூர் லீக் டி புட்போல் அமைப்பின் தலைவர் நடாலி போய் டி லாவுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓரினச் சேர்க்கை தொடர்பான கருத்துக்களையும், பாடல்களையும் சமூக ஊடகங்களில் பதிவிடுமாறு இந்த வகையான பிரபலங்கள் விளையாட்டு ரசிகர்களிடம் கோரியிருந்தனர். அதுவே தற்போது ஏனைய தரப்பினருக்கு பெரும் தலையிடியாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை