ஜப்பான் புது யுகத்தின் பெயர் இன்று அறிவிப்பு

ஜப்பானில் புதிய பேரரசரின் ஆட்சிக்காலத்துக்கான பெயர் இன்று காலை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. பேரரசர் அக்கிஹிட்டோ அரியணை ஏறியதிலிருந்து இதுவரையுள்ள 31 ஆண்டு காலம், ஹெய்ஷி யுகம் என்றழைக்கப்பட்டது. இம்மாதம் மாதம் 30ஆம் திகதி அவர் அரியணையைத் துறக்கும்போது அந்த யுகம் முடிவுக்கு வரும்.

மே முதல் திகதி, பட்டத்து இளவரசர் நொருஹிட்டோ ஜப்பானின் புதிய பேரரசராக முடிசூட்டிக்கொள்வார். அதற்கு ஒரு மாதத்துக்கு முன்னர் புதிய யுகத்தின் பெயர் அறிவிக்கப்படுவது ஜப்பானிய வழக்கம்.

7ஆம் நூற்றாண்டிலிருந்து இதுவரை ஜப்பானில் சுமார் 250-யுகங்கள் நடப்பில் இருந்துள்ளன.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை