ஆஸி. பத்திரிகையில் தவறாக போட்டி பத்திரிகை இணைப்பு

அவுஸ்திரேலியாவின் பிரபல டப்லொயிட் பத்திரிகை ஒன்று தனது போட்டிப் பத்திரிகையின் பக்கங்களை இணைத்து தவறுதலாக அச்சிட்டுள்ளது.

பிரபல ஊடக ஜாம்பவானான ரூபர்ட் மர்டொக்கிற்கு சொந்தமான சிட்னியை தளமாகக் கொண்ட டெய்லி டெலிகிராப் பத்திரிகை தவறுதலாக சிட்னி மோர்னிங் ஹரல்ட் பத்திரிகையின் இரு பக்கங்களை தனது பத்திரிகையுடன் அச்சிட்டு வெளியிட்டுள்ளது. காலநிலை மாற்றத்தை தடுக்கும் நடவடிக்கைகள் என்ற கட்டுரை ஒன்றும் அவ்வாறு அச்சிடப்பட்ட பக்கங்களில் அடங்கும். உற்பத்தி செயற்பாட்டின்போது இது நடந்திருப்பதாக குறிப்பிட்டிருக்கும் டெலிகிராப், இந்த தவறுக்காக மன்னிப்புக் கேட்டுள்ளது.

“சிட்னி நகரின் மேற்கில் உள்ள ஒரே அச்சக வசதியையே இரு பத்திரிகைகளும் பகிந்துகொண்டுள்ளன” என்று டிவிட்டர் ஊடே அந்தப் பத்திரிகை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் இந்த தவறு குறித்து சமூக தளங்களில் பலரும் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளனர். “இதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டியதில்லை” என்று குறிப்பிட்டிருக்கும் சிட்னி மோர்னிங் ஹரல்ட் ஊடகவியலாளர் கேட் மெக்லிமோன்ட், “சில (ஹரல்ட்) பக்கங்கள் கிடைத்திருப்பது வாசகர்களுக்கு போனஸ் ஆகும்” என்றுள்ளார்.

Fri, 04/26/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை