அப்பிள் சாதனங்கள் மீட்பு

அப்பிள் நிறுவனம் மின்னூட்டம் செய்யச் செருகுவதற்குப் பயன்படுத்தப்படும் சாதனங்கள் சிலவற்றை மீட்டுக்கொண்டுள்ளது. அவை ஹொங்காங், சிங்கப்பூர், பிரிட்டன் ஆகிய இட ங்களில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை.

சில நேரங்களில் அந்தச் சாதனங்கள் உடையும் வாய்ப்பு இருப்பதாக நிறுவனம் கூறியது. உடைந்த சாதனத்தில் உள்ள உலோகப் பாகங்களைத் தொட்டால் மின்சாரம் தாக்கும் ஆபத்துள்ளதாக அப்பிள் நிறுவனம் தெரிவித்தது.

உலகம் முழுவதும் அதுபோன்ற 6 சம்பவங்கள் நடந்துள்ளதாக நிறுவனம் அறிகிறது. 2003ஆம் ஆண்டுக்கும் 2010ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், நிறுவனத்தின் மெக் பொருள்கள், ‘வேர்ல்ட் டிரவல் அடப்டர் கிட்்’ தொகுதி ஆகியவற்றுடன் விநியோகம் செய்யப்பட்ட செருகும் சாதனங்கள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

Sat, 04/27/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை