பெண்ணின் கண்ணுக்குள் வசித்து வந்த தேனீக்கள்

தாய்வானில் பெண் ஒருவரின் கண்ணுக்குள் நான்கு சிறிய தேனீக்கள் வசித்திருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஹி என்று மாத்திரம் பெயர் குறிப்பிடப்பட்ட 28 வயதான அந்தப் பெண் களைகளை அகற்றும்போது அவருக்குள் இந்த தேனீகள் நுழைந்துள்ளன.

தனது கண்ணில் வலியை உணர்வதாக மருத்துவமனைக்கு சென்ற அந்தப் பெண்ணின் கண்களை நுண்ணோக்கி கொண்டு பார்த்தபோது அவரது வீக்கமடைந்த கண் இமைகளுக்கு கீழ் இந்த சிறிய தேனீக்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அந்தப் பூச்சிகளை உயிருடன் அகற்றுவதற்கு மருத்துவர்களால் முடிந்துள்ளது.

“கண்களில் ஏதோ பூச்சியின் கால்கள் இருப்பது போல் இருந்தது. நுண்ணோக்கி மூலம் எடுத்துவிடலாம் என பார்த்தேன். அப்போது 4 தேனீக்கள் உள்ளே இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் மெதுவாக அவரது கருவிழிகளுக்கு எவ்வித பாதிப்புமின்றி தேனீக்களை எடுத்தேன். அவை உயிருடன் இருந்தன. உலகிலேயே இது தான் முதல் நிகழ்வு என நினைக்கிறேன். இவை வியர்வை தேனீக்கள் ஆகும்” என கூறினார்.

வியர்வை தேனீ என்று அழைப்படும் 4மி.மி. அளவு கொண்ட இந்த தேனீ உலகெங்கும் காண முடிகின்ற மனித வியர்வையை ஈக்கும் தேனீ இனமாகும். அவை அதிக புரதம் கொண்ட கண்ணீரை குடிப்பதாகவும் உள்ளன.

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை