இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை; காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை

காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபைக்கும் அமெரிக்க மிஸன் திருச்சபை பிரதி நிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நேற்று (24)  மாலை காத்தான்குடி ஜம்இய்யத்துல் உலமா சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.அப்துல் கையூம், மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம்.அலியார் உட்பட உலமா சபை பிரிதி நிதிகள் சிவில் சமூக பிரதி நிதிகள் மற்றும் அமெரிக்க மிஸன் திருச்சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது சமய சமூகங்களுக்கிடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புதல், புரிந்துனர்வை உருவாக்குதல் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்தக் கூட்டத்தின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மட்டக்களப்பு புனித சியோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு தாக்குதலை கண்டித்த காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் இஸ்லாம் ஒரு போதும் தீவிரவாத்தை ஆதரிக்கவில்லையெனவும் இன ஐக்கியம் சகோதரத்துவம் ஒற்றுமை என்பவற்றையே போதிப்பதாகவும் தெரிவித்தனர்.

இவ்வாறான தாக்குதலை முஸ்லிம் நபர் யாராவது செய்திருந்தால் அவர் முஸ்லிமாக இருக்க முடியாது எனவும் அவருக்கும் இஸ்லாத்துக்கும் சம்பந்தம் இல்லையெனவும் மேலும் தெரிவித்தனர்.

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

Thu, 04/25/2019 - 13:30


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை