டிரம்பின் விடுதிக்குள் நுழைய முயன்ற பெண் ஒருவர் கைது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்குச் சொந்தமான மாரா லாகோ விடுதியில் அவர் தங்கியிருந்தபோது அதனுள் நுழைய முயன்ற பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

புளோரிடாவில் உள்ள அந்த விடுதிக்குள் நுழைய முயன்ற சாங் யுஜிங்கிடம் சில கைத்தொலைபேசிகளும் தீங்கு விளைவிக்கும் மென்பொருள் கொண்ட தம்ப் டிரைவ் கருவியும் இருந்தன.

நீச்சல் குளத்திற்குச் செல்ல விடுதிக்கு வந்ததாகச் சாங் முதலில் கூறியுள்ளார். ஆனால் அவரிடம் நீச்சல் உடை இல்லை.

பின்னர் சீன–அமெரிக்க நட்புறவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்ததாக அவர் கூறியுள்ளார். அப்படி ஒரு நிகழ்ச்சி அங்கு இடம்பெறவில்லை.

பொலிஸ் அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டபோது அமெரிக்க–சீன வர்த்தக உறவைப் பற்றி டிரம்ப் குடும்பத்தாரிடம் பேசுவதற்கு வந்ததாகச் சாங் கூறினார். சார்ல்ஸ் எனும் தம்முடைய சீன நண்பர் தன்னை அவ்வாறு செய்யக் கூறியதாக அவர் கூறினார்.

சாங்கிடம் இரண்டு சீனக் கடவுச்சீட்டுகள் இருந்தன.

மத்தியப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளிடம் பொய் கூறியதாகவும் தெரிந்தே தடை செய்யப்பட்ட கட்டடத்தினுள் நுழைய முயன்றதாகவும் சாங் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் சாங் கூறியதில் உண்மையும் இருந்திருக்கலாம் என்று மியாமி ஹரல்்ட் பத்திரை கூறியது.

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு சீனப் பெண், சமூக ஊடகங்கள் பற்றிய இரண்டு சீன நிகழ்ச்சிகள் விடுதியில் இடம்பெறவுள்ளதாக அண்மையில் விளம்பரம் செய்துள்ளார்.

தமக்கு டிரம்ப் குடும்பத்தாரைத் தெரியும் என்று அவர் கூறி வருவதாகவும் மியாமி ஹரல்்ட் தெரிவித்தது.

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை