மின்சார சபைக்கு நீதிமன்றத்தினால் அழைப்பாணை

சட்டவிரோதமான முறையில் மின்வெட்டு மேற்கொள்ளப்படுவதாகக் கூறி  இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கு எதிராகவே, இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் நேற்று (02)  இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 9ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இலங்கை மின்சார சபை ஊழியர்களை ஆஜராகுமாறு கூறி இலங்கை மின்சார சபை அதிகாரிகளுக்கு, நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

நாளாந்த அறிக்கைகளை இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு இலங்கை மின்சார சபையினர் சமர்ப்பிக்கத் தவறியுள்ளதாகக் கூறி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

இலங்கை பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு,  இலங்கை மின்சார சபையிடமிருந்து இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு மே 28ஆம் திகதியே அறிக்கை கிடைத்திருந்தது. தற்போது இடம்பெறும் மின்வெட்டுத் தொடர்பாக பொதுச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு மின்சார சபை அதிகாரிகள் எந்தவொரு அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை எனவும், சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

Wed, 04/03/2019 - 12:01


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை