ஆர்ப்பாட்ட முகாமை கலைக்க சூடான் பாதுகாப்பு படை முயற்சி

சூடான் தலைநகரில் பாதுகாப்பு அமைச்சுக்கு வெளியில் முகாமிட்டிருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைப்பதற்கு பாதுகாப்பு படையினர் நேற்று முயற்சி மேற்கொண்டனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு படையினர் கண்ணீர்ப் புகைப்பிரயோகம் செய்துள்ளனர். எனினும் பாதுகாப்பு படையினரிடம் இருந்து ஆர்ப்பாட்டக்காரர்களைப் பாதுகாப்பதற்கு படை வீரர்கள் முன்வந்துள்ளனர்.

மத்திய கார்டூமின் ஜனாதிபதி ஒமர் அல் பஷீரின் வசஸ்தளத்திற்கு வெளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் முகாமிட்டனர். அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அரச எதிர்ப்பு கோசங்களை எழுப்பினர். பஷிர் மற்றும் அவரது தேசிய கொங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடந்த டிசம்பர் 19 தொடக்கம் சூடானில் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுவதோடு இதில் பல டஜன் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

எனினும் பதவி விலக மறுக்கு பஷீர், தமது எதிர்ப்பாளர்கள் தேர்தல் மூலம் ஆட்சியை பிடிக்கும்படி கூறி வருகிறார்.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை