உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்தில் வரும் மே 30 முதல் ஜுலை 14 வரை நடைபெறவுள்ள 12ஆவது உலகக் கிண்ண போட்டிக்கான விராத் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் விராட் கோலி (தலைவர்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், மகேந்திர சிங் தோனி, முகமது ஷமி, புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, கேதர் ஜாதவ், குல்தீப் யாதவ், கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர், ஹர்திக் பாண்ட்யா, சாஹல், ஜடேஜா ஆகிய வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வரும் 23ஆம் திகதி கடைசி நாளாகும்.

Wed, 04/17/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை