பிரான்ஸின் பழமை வாய்ந்த தேவாலயத்தில் தீ

பிரான்ஸில் வரலாற்றுச் சின்னமாக விளங்கும் கத்தோலிக்கத் தேவாலயத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால், மேற்கூரை மற்றும் பிரதான ஊசிக் கோபுரம் இடிந்து விழுந்துள்ளது.

பிரான்ஸின் தலைநகரான பரிஸில் அமைந்துள்ள 850ஆண்டுகள் பழமை வாய்ந்த கத்தோலிக்கத் தேவாலயமான  நோட்ரே டேம் கதீட்ரல் எனும் தேவாலயத்திலேயே நேற்று (15) திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டதாக, சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.

குறித்த தேவாலயத்தில் புனரமைப்புப் பணி இடம்பெற்றுவந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தீ விபத்து  ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லை எனவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும், கதீட்ரல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசித்துவரும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஐரோப்பியர்களின் கட்டிடக் கலைக்கு உதாரணமாகத் திகழ்ந்துவந்த இப்பழமையான தேவாலயம் தீக்கிரையானமை அந்நாட்டு மக்கள் மத்தியில் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த தேவாலயமான கதீட்ரல், கத்தோலிக்கர்கள் மற்றும் பிரான்ஸில் 850வருட பழமை வாய்ந்த அடையாளச் சின்னமாக இருந்துவருகின்றது.

1163ஆம் ஆண்டு பாப்பரசர் அலெக்ஸாண்டரினால் () இத்தேவாலயத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், 13ஆம் நூற்றாண்டில் இதன் வேலை பூர்த்தியடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Tue, 04/16/2019 - 10:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை