பண்டிகைக் காலத்தை கருதி எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவில்லை

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு சலுகை வழங்குவதைக் கருத்திற்கொண்டு எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாதென

நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.இதற்கமைய நேற்றிலிருந்து (10) எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கவில்லை. கடந்த மார்ச் மாதம் 67 அமெரிக்க டொலராக இருந்த ஒரு பெரல் மசகு எண்ணெயின் விலை இன்று 74 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இவ்வாறு சர்வதேசத்தில் எரிபொருள் விலை அதிகரித்தாலும் பண்டிகை காலத்தில் மக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதில்லையென அரசு தீர்மானித்துள்ளது.

மார்ச் மாதம் 10 ஆம் திகதியும் விலைத் திருத்தம் மேற்கொள்ளப்பட்ட போதும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சர்வதேச வர்த்தக சந்தையின் விலை அதிகரிப்புக்கு இணைந்ததாக இங்கு மிகக் குறைந்த அளவிலே எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Thu, 04/11/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை