இன்று நள்ளிரவு முதல் தனியார் பஸ் வேலை நிறுத்தம்

அகில இலங்கை தனியார் பஸ் சேவையாளர் சங்கம் இன்று (09) நள்ளிரவு முதல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

அரசாங்கத்தினால் அமுல்படுத்த திட்டமிட்டுள்ள புதிய அபராத தொகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக, அந்த சங்கத்தின் பிரதான அமைப்பாளர் யூ.கே. குமாரரத்ன ரேனுக தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 2 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானியில் 7 போக்குவரத்து குற்றங்களுக்கு 25,000 ரூபா வரை அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. சாதாரண வேகம், இடது பக்கமாக முந்துதல் போன்ற குற்றங்களுக்கு அபராதத் தொகையாக 3,000 ரூபா விதிக்கப்படுகிறது. எங்களுடைய ஒரு நாள் வருமானம் 1,500 ரூபாவாகும் என்று யூ.கே. குமாரரத்ன ரேனுக தெரிவித்தார்.

நாங்கள் இவ்வாறு குற்றச்சாட்டுக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டால், எங்கள் குடும்பங்களை கவனிக்க முடியாது போகும். எனவே அதிகரித்த இவ்வாறான அபராத தொகை, மேல் மாகாணத்தில் பஸ்களுக்கு நீல நிறம் மை பூசுதல் மற்றும் பஸ் ஊழியர்கள் சீருடை அணிவது போன்ற விடயங்களை நீக்குதல் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Tue, 04/09/2019 - 13:16


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை