விலைச்சூத்திரத்தின் படி எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை

எரிபொருள் விலைசூத்திரத்திற்கமைய இம்முறை எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படாது என நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.  

கடந்த மாதம் 10ம் திகதிக்கும் இம்மாதத்துக்குமிடையில் எரிபொருளின் விலை உலகச் சந்தையில் 2ரூபாவால் மாத்திரமே உயர்வடைந்துள்ளதால் இங்கு எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டிய அவசியம் கிடையாது என்றும் நிதியமைச்சு வட்டாரங்கள் தெரிவித்தன.

உலகச் சந்தையின் எரிபொருளின் விலை அதிகரிப்புக்கிணங்க இலங்கையிலும் விலையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காக நிதியமைச்சு விலை சூத்திரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கிணங்க ஒவ்வொருமாதத்தின் 10ஆம் திகதிகளிலும் எரிபொருள் விலைகளிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுவருகிறது. இதற்கிணங்க இம்மாதத்திற்காக எரிபொருள் மாற்றம் தொடர்பில் நாளை 11ம்திகதி பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளதுடன் அதன்போது விலை மாற்றம் ஏற்படாது என்றும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. 

எரிபொருள் விலை சூத்திரத்திற்கிணங்க கடந்த மாதம் இடம்பெற்ற விலை மாற்றத்தின் போது ஒக்டேன் 92ரக பெற்றோல் லீட்டர் ஒன்று 6ரூபாவாலும், ஒக்டேன் 95ரக பெற்றோல் லீட்டர் 5ரூபாவாகவும் ஒட்டோ டீசல் லீட்டர் 4ரூபாவாலும் சுப்பர் டீசல் லீட்டர் 8ரூபாவாலும் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.   (ஸ) 

(லோரன்ஸ் செல்வநாயகம்) 

Wed, 04/10/2019 - 08:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை