அமெரிக்கதலைவர்களை வசைபாடும் வட கொரியா

அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டனை, வட கொரியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கடுமையாகச் சாடியுள்ளார்.

வட கொரியா அணுவாயுத நடவடிக்கைகளைக் கைவிடுவது குறித்த பேச்சுகளில் போல்ட்டன் ‘அறிவற்ற’ வகையில் கருத்துத் தெரிவித்ததாய் வட கொரிய அதிகாரி சாடினார்.

அமெரிக்காவிடமிருந்து உருப்படியாக எதையும் எதிர்பார்க்கமுடியாது என்றார் அவர்.

வட கொரியா கடுமையாகச் சாடியிருக்கும் இரண்டாவது நபர் போல்ட்டன் ஆவார். முன்னதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோவை ‘பொறுப்பற்றவர்’ என்று வட கொரியா கூறியிருந்தது.

அமெரிக்கா மற்றும் வட கொரியா இடையிலான பேரப் பேச்சுகளிலிருந்து பொம்பேயோவை அகற்ற வேண்டும் என்று வட கொரியா கூறிவருகிறது.

Mon, 04/22/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை