கொழும்பு சிறைச்சாலைகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் விஸ்தரிப்பு

SUG

கொழும்பில் சிறைச்சாலைகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு செல்லும் வழிகளில் கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கமைய வெலிக்கடை சிறைச்சாலை, வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலை, மகஸின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை ஆகியவற்றிலும் அச்சிறைச்சாலைகளுக் செல்லும் வீதிகளிலும் கடற்படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து, கொழும்பிலுள்ள சிறைச்சாலைகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சிடம், சிறைச்சாலைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்திருந்தமைக்கு அமைய பாதுகாப்பு நடவடிக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. 

Thu, 04/25/2019 - 10:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை