அமெரிக்காவின் பங்கை தடுக்கும் தீர்மானத்தின் மீது டிரம்ப் ‘வீட்டோ’

யெமனில் சவூதி அரேபியா தலைமையிலான யுத்தத்திற்கான அமெரிக்காவின் ஆதரவை முடிவுக்குக் கொண்டுவரும் அந்நாட்டு பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலம் ஒன்றை ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் ரத்துச் செய்துள்ளார்.

இந்த தீர்மானத்தை ‘தேவையற்றது’ மற்றும் அரசியலமைப்பு அதிகாரத்தை பலவீனப்படுத்தும் ஆபத்தான முயற்சி என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். 2017ஆம் ஆண்டு பதவிக்கு வந்தது தொடக்கம் தனது ஜனாதிபதிக்கான வீட்டோவை டிரம்ப் இரண்டாவது முறையாக பயன்படுத்தியுள்ளார்.

ஸ்தன்பூலில் உள்ள சவூதி துணைத் தூதரகத்தில் ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து யெமன் மீதான டிரம்பின் கொள்கை தொடர்பில் அமெரிக்க கொங்கிரஸில் எதிர்ப்பு அதிகரித்தது.

இந்த தீர்மானம் கடந்த ஆண்டு ஏப்ரலில் பிரதிநிதிகள் அவையிலும் மார்ச்சில் செனட்டிலும் நிறைவேற்றப்பட்டது. போர் அதிகாரம் தொடர்பில் துருப்புகளை அனுப்பும் ஜனதிபதியின் திறனை கட்டுப்படுத்தும் தீர்மானம் ஒன்றுக்கு இரு அவைகளிலும் ஆதரவு கிடைத்தது முதல் முறையாக இருந்தது. ஜனாதிபதியின் இந்த நடவடிக்கைக்கு சபாநாயகரான ஜனநாயகக் கட்சியின் நான்சி பெலொசி உட்பட பலரும் கண்டனம் வெளியிட்டுள்ளனர்.

ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் கடந்த 2015 ஆம் ஆண்டு நாட்டின் மேற்குப் பகுதியை கைப்பற்றியது மற்றும் ஜனாதிபதி அப்த்ரப்பு மன்சூர் ஹதி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றதை அடுத்து யெமன் யுத்தம் தீவிரம் அடைந்தது. ஹதி அரசை மீண்டும் கொண்டுவர சவூதி மற்றும் பிராந்தி சுன்னி அரசுகள், ஷியா ஈரான் அதரவளிப்பதாக நம்பப்படும் ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக யுத்த நடவடிக்கையை ஆரம்பித்தது.

இந்த சவூதி கூட்டணிக்கு அமெரிக்கா பில்லியன் டொலர்கள் ஆயுதங்கள் மற்றும் உளவு தகவல்களை வழங்கி உதவி வருகிறது.

இந்த யுத்தத்தில் யெமனில் 7,000 பொதுமக்கள் வரை கொல்லப்பட்டிருப்பதோடு இதில் 65 வீதமானது சவூதி கூட்டணியின் வான் தாக்குதல்களால் இடம்பெற்றது என ஐ.நா குறிப்பிடுகிறது.

Thu, 04/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை