எண்ணெய் விலை உச்சம்

எண்ணெய் விலை நவம்பர் மாதத்துக்குப் பின் நேற்று மிக உயர்வான நிலையை எட்டியுள்ளது. ஈரானிய எண்ணெய் இறக்குமதிகளுக்கான அனைத்துச் சலுகைகளும் அடுத்த வாரம் முடிவுக்கு வரும் என்று வொஷிங்டன் அறிவித்ததைத் தொடர்ந்து எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. தடைகள் விதிக்கப்பட்டுள்ள ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த இறக்குமதியாளர்களை நெருக்குவது வாஷிங்டனின் நோக்கமாகும். அதனால் உலகளாவிய எண்ணெய் உற்பத்தி அளவு மேலும் குறைந்துள்ளது. பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை பீப்பாய்க்கு 74 டொலர் இருந்தது. முன்னைய வர்த்தக நாளின் இறுதியில் இருந்த விலையை விட அது 21 சதம் அதிகமாகும்.

Thu, 04/25/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை