அவசரகால சட்டத்தின் தீவிரவாத தடுப்பு வர்த்தமானி வெளியீடு

அவசரகால சட்டத்தின் தீவிரவாத தடுப்பு வர்த்தமானி வெளியீடு-Terrorist-Act-Gazette-Released

நேற்று முதல் அமுல்

அவசரகால சட்டத்தின் தீவிரவாத தடுப்பு தொடர்பான சரத்து உள்ளடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் பொதுமக்களின் பாதுகாப்பு, நாட்டின் அமைதியைப் பாதுகாத்தல், மக்களின் அத்தியவசிய தேவைகள் உள்ளிட்ட விடயங்களை உறுதிப்படுத்துவதற்கு,பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புச் சபை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று (22) முற்பகல் ஒன்றுகூடிய போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதனடிப்படையில் பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைகளை மாத்திரம் நேற்று(22) முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

Tue, 04/23/2019 - 14:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை