அமெரிக்க யூத வழிபாட்டு தலத்தில் சூடு: ஒருவர் பலி

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள யூத வழிபாட்டுத் தலத்தில் ஆயுததாரி ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் கொல்லப்பட்டு மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இந்தத் தாக்குதல் தொடர்பில் 19 வயது ஜோன் ஏர்னஸ்ட் என்ற இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த யூத வழிபாட்டுத் தலத்தில் பாஸ்கா கொண்டாட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோதே இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கான காரணம் என்ன என்று பொலிஸார் கூறாத நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இதனை வெறுப்பு குற்றமென குறிப்பிட்டுள்ளார்.

அந்த துப்பாக்கிதாரி தாக்குதலுக்கு 8 மணி நேரத்திற்கு முன்னர் பேஸ்புக் பக்கத்தில் தனது கருத்தினை பகிர்ந்துள்ளார். அதில் கிரைஸ்ட்சேர்ச்சில் இரு பள்ளிவாசல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு மற்றும் கடந்த ஒக்டோபரில் பீட்டஸ்பேர்க் யூத வழிபாட்டுத் தலத்தின் மீதான தாக்குதல்களால் தான் தூண்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

பீட்டர்ஸ்பேர்க்கில் ஆறு மாதங்களுக்கு முன் யூத வழிப்பாட்டு தலத்தில் நடந்த தாக்குதலில் 11 பேர் பலியாகினர். அமெரிக்காவின் அண்மைய வரலாற்றில் யூதர்களுக்கு எதிராக நடந்த மோசமான தாக்குதல் இதுவாகும்.

கடந்த மாதம் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதுடன் ஏர்னஸ்டுக்கு உள்ள தொடர்பு பற்றி விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

Mon, 04/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை