கொல்கத்தா அதிக சிக்ஸர்களில் முதலிடம்

ஐ.பி.எல் தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள ஆட்டங்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 57 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளது.

ஐ.பி.எல் 2019 பருவகாலம் கடந்த மாதம் 23ஆம் திகதி ஆரம்பமானது. கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் 21 ஆட்டங்கள் முடிவடைந்துள்ளன. இதில் சென்னை சுப்பர் கிங்ஸ் 5 போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் நான்கு வெற்றிகள் பெற்றுள்ளன.

இந்த பருவத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் அந்த்ரே ரஸல் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் போட்டிக்கு போட்டி சிக்சர் மழையாக பொழிந்து வருகிறது. ஐந்து போட்டிகளில் நான்கில் களம் இறங்கிய அவர் 22 சிக்சர்கள் விளாசி முதல் இடத்தில் உள்ளார். மேலும் அந்த அணியின் நிதிஷ் ராணா 12 சிக்கர்கள் அடித்து 2ஆவது இடத்தில் உள்ளார்.

மொத்தமாக 57 சிக்சர்கள் அடித்து கொல்கத்தா முதலிடம் வகிக்கிறது. மும்பை இந்தியன்ஸ் 32 சிக்சர்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

ஆர்.சி.பி 31 சிக்சர்களுடன் 3ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 30 சிக்சர்களுடன் 4ஆவது இடத்திலும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் 29 சிக்சர்களுடன் ஐந்தாவது இடத்திலும், டெல்லி கேப்பிட்டல்ஸ் 29 சிக்சர்களுடன் 6ஆவது இடத்திலும், சி.எஸ்.கே 25 சிக்சர்களடன் 7ஆவது இடத்திலும், ராஜஸ்தான் ரோயல்ஸ் 24 சிக்சர்களுடன் 8ஆவது இடத்திலும் உள்ளன.

Tue, 04/09/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை