கடவுளின் பெயரால் எவரும் எவரையும் அழிக்க முடியாது

கடவுளின் பெயரால் எவரும் எவரையும் அழிக்க முடியாது அதற்கான உரிமையும் அவர்களுக்கு கிடையாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.

அவ்வாறு எவரும் மற்றவரை அழிப்பாரானால் அது கடவுளுக்கும் இயற்கைக்கும் மாறானது என்றும் பிறருடன் இணைந்து வாழ்வதே இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள கொடை என்றும் பேராயர் தெரிவித்தார். குண்டுத் தாக்குதல்களில் பலியானோர் தொடர்பில் நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்.

இது முழு மனித குலத்திற்கும் எதிரான குற்றமும் பாவமுமாகும் என்று

அவர் தெரிவித்தார்.

ஞாயிற்றுக்கிழமையான நேற்றைய தினம் நாட்டின் சகல ஆலயங்களிலும் ஞாயிறு திருப்பலி பூசை தடை செய்யப்பட்டிருந்த நிலையில், கொழும்பு பேராயர் இல்லத்திலிருந்து ஒளி, ஒலிபரப்புச் செய்யப்பட்ட திருப்பலி பூசை மறையுரையின் போதே பேராயிர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட முக்கியஸ்தர்கள் பெரும்பாலான குருக்கள், சன்னியாஸ்திரிகள் பங்கேற்ற இத்திருப்பலியில் தொடர்ந்து உரையாற்றிய பேராயர், கத்தோலிக்கத் திருச் சபை இறை இரக்கப் பெருவிழாவைக் கொண்டாடும் இன்றைய தினத்தில் இறைவன் தொடர்பில் எம்மனதிலிருக்கும் நம்பிக்கைக்கு சவாலான சம்பவத்தை நினைவு கூற வேண்டியுள்ளது.

கடந்த ஈஸ்டர் ஞாயுற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவங்கள் எமது மனதை சோதிப்பதாகவும் அமைந்துள்ளது.

உண்மையில் இறைவன் எம்மை அன்பு செய்கின்றாரா? அவரது கருணை எமக்குக் கிடைக்கின்றதா? போன்ற கேள்விகள் மனித உள்ளத்தில் எழுகின்ற காலம் இது.

தற்போது உலகின் சனத்தொகை 9 பில்லியனாக உள்ளது. அந்த 9 பில்லியனில் நானும் ஒருவன். நீங்களும் அதிலொருவரே, குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் இறந்த ஒவ்வொருவரும் அவ்வாறே. எனினும் ஒருவரைப் போன்று இன்னொருவரை நாம் உலகில் காண முடியாது. இரட்டையர்கள் மத்தியிலும் கூட வித்தியாசங்கள் உள்ளன. இறைவன் ஒவ்வொரு வரையும் வெவ்வேறு விதமாகவும்வெவ்வேறு திறமை படைத்தவர்களாகவும் வெவ்வேறு பலவீனமுடையவர்களாவர் படைத்துள்ளார் என்பதே உண்மை. இதற்கிணங்க நாம் ஒவ்வொருவரும் இனறையருக்குப் பெறுமதியானவர்கள். அவரது அன்பையும் கருணையையும் உலகிற்குப் பறை சாற்றவே நம்மைப் பிடைத்துள்ளார். இதனையே பரிசுத்த வேதாகமம் இரைறவன் தமது சாயலாகவே மனிதனைப் படைத்ததாகக் கூறுகின்றது. அவர் மனிதனைப் படைத்து சந்ததியை பெருக்கு உலகை ஆளவேண்டும் என கேட்டுக் கொண்டார். அவர் இவ்வுலகில் மனிதனாகப் பிறந்து மனிதன் எதிர்கொள்ளும் கஷ்டங்கள், துன்பங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டு மனிதருக்காகவே சிலுவையில் மரித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 04/29/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை