டெல்லி சுப்பர் ஓவரில் வெற்றி

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி சுப்பர் ஓவரில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 185 ஓட்டங்களை குவித்தது. அதிகபட்சமாக ரசல் 62 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இதனையடுத்து 186 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக பிருத்வி ஷா –ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி கொல்கத்தா அணியின் பந்துவீச்சை சிதறடித்தது.

அதிரடியாக விளையாடிய பிருத்வி ஷா 99 ஓட்டங்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். இறுதியில் டெல்லி அணி வீரர்கள் தடுமாற்றம் கண்டதால் ஆட்டம் டையில் முடிந்தது.

இதனையடுத்து வெற்றியை தீர்மானிக்க சுப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் முதலில் களமிறங்கிய டெல்லி அணி 6 பந்துகளில் 10 ஓட்டங்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியால் 6 பந்துகளில் 7 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை