அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் சம்பியன்

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் அனுசரணையில் அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் கழகங்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் இவ்வாண்டுக்கான சம்பியனாக தெரிவாகியது.

அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் கடந்த சனிக்கிழமை இதன் இறுதி நிகழ்வும் பரிசளிப்பு வைபவமும் நடைபெற்றது. இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கழகங்களுக்கிடையில் நடைபெற்று முடிந்த போட்டி நிகழ்ச்சிகளின் மொத்தப் பதக்கங்களின் அடிப்படையில் அட்டாளைச்சேனை சுப்பர் சொனிக் விளையாட்டுக் கழகம் 06 தங்கம் 05 வெள்ளி 02 வெங்கலம் உள்ளடங்கலாக 13 பதக்கங்களைப் பெற்று முதலிடத்திலும் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் 06 தங்கம் 02 வெள்ளி 02 வெங்கலம் உள்ளடங்கலாக மொத்தமாக 10 பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தினையும் பெற்றன.

(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)

Wed, 04/17/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக