உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்: நியூ+ஸிலாந்து அணி அறிவிப்பு

 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை, கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.இதற்கிடையில் இத்தொடரில் விளையாடப் போகும் நியூஸிலாந்து அணி, முதல் அணியாக உலகக்கிண்ண தொடருக்கான அணி வீரர்களின் விபரத்தை அறிவித்துள்ளது.

15பேர் கொண்ட இந்த அணியில், புதுவரவாக நியூஸிலாந்து அணிக்காக ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளில் விளையாடிய 28 வயதான விக்கெட் காப்பாளர் டொம் பிளன்டெல், இத்தொடரின் ஊடாக, ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாகிறார். உலகக்கிண்ண தொடருக்கான நியூஸிலாந்து அணியில், விக்கெட் காப்பாளரான டிம் செய்பர்ட்டே இடம்பெறவிருந்தார்.ஆனால், உள்ளூர் மட்ட போட்டிகளின் போது, அவருக்கு விரலில் காயம் ஏற்பட்டது. ஆகையால் ஆச்சரியப்படுத்தும் வகையில், டொம் பிளன்டெல் அணிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார்.

சகலதுறை வீரரான கொலின் டி கிராண்ட்ஹோம் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார். அத்தோடு மற்றொரு சகலதுறை வீரரான ஜிம்மி நீஸமும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும், சுழற்பந்து வீச்சாளர்களான மிட்செல் சான்ட்னர் மற்றும் இஷ் சோதி ஆகியோர் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.வேகப்பந்து வீச்சாளர்களான டிம் சவுத்தீ, மெட் ஹென்ரி மற்றும் ட்ரென்ட் போல்ட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.அதிரடி துடுப்பாட்ட வீரரான கொலின் முன்ரோ, சமீபகாலமாக பெரிதாக சோபிக்காத நிலையிலும் அவர் உலகக்கிண்ண தொடரில் சிறப்பாக விளையாடுவர் என்ற தேர்வுக்குழுவின் நம்பிக்கையின் அடிப்படையில் அவர் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

அணியின் முழுமையான விபரம்

இந்த அணியில், கேன் வில்லியன்சன், டொம் பிளன்டெல், ட்ரென்ட் போல்ட், கொலின் டி கிராண்ட்ஹோம், லொக்கி பெர்குசன், மார்டின் கப்டில், மெட் ஹென்ரி, டொம் லதம், கொலின் முன்ரோ, ஜிம்மி நீஸம், ஹென்ரி நிக்கோல்ஸ், மிட்செல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சவுத்தீ, ரோஸ் டெய்லர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் இத்தொடர், குறித்த ஒவ்வொறு புதிய அறிவிப்பினையும் இரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

அத்தோடு வீரர்களும் உலகக்கிண்ண தொடருக்கான அணியில் இடம்பிடிக்க வேண்டுமென கடுமையாக போராடி வருகின்றனர்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை