லைகா தயாரிப்பில் ரஜினி - நயன்

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் 10ஆம் திகதி மும்பையில் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். அரசியல், தாதாக்கள், அதிரடி என்று விறுவிறுப்பான திரைக்கதையுடன் இப்படம் உருவாகவுள்ளது.

Sun, 04/07/2019 - 16:33


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை