இரண்டாவது ஆண்டாகவும் திரித்துவ கல்லூரி அணிக்கு கந்துரட்ட அனுசரணை

திரித்துவ கல்லூரி ரக்பி அணிக்கு வலுவூட்டும் தனது கடப்பாட்டை நீடிக்கும் அறிவிப்பை கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்ட்றீஸ் பிரைவட் லிமிடெட் செய்தியாளர் மாநாட்டில் அறிவித்துள்ளது.

திரித்துவக் கல்லூரிக்கு முதன்மை அனுசரணையாளராக கந்துரட்ட அம்ரெல்லா இன்டஸ்ட்றீஸ் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக செயற்படுகிறது.

ரக்பி விளையாட்டில் 113 ஆண்டுகள் வளமான மரபைக் கொண்ட கண்டி, திரித்துவக் கல்லூரி, பாடசாலை ரக்பியை நாட்டில் அறிமுகம் செய்த முன்னோடிகளில் ஒன்றாக உள்ளது. 1906 ஆம் ஆண்டு தொடக்கம் எந்த தடங்கலும் இன்றி பாடசாலை ரக்பி விளையாட்டில் இடம்பெற்று வரும் திரித்துவக் கல்லூரி, ஆண்டுதோறும் முன்னணி ரக்பி அணிகளை உருவாக்கி வருகிறது.

இந்தப் பாடசாலை பல தேசிய வீரர்கள், அணித்தலைவர்கள், நடுவர்கள் மற்றும் நிர்வாகிகளை உருவாக்கி ரக்பி விளையாட்டுக்கு பங்களிப்புச் செய்து வருகிறது.

கந்துரட்ட அம்ரெல்லா நிறுவனமும் வேறு விதத்தில், 1978 ஆம் ஆண்டு அது நிறுவப்பட்டது தொடக்கம் தரமான குடைகளில் சிறந்தவர்களாக உருவெடுத்து உற்பத்தி வரிசைகளில் முன்னணியில் திகழ்ந்து உலக வர்த்தகத்தில் ஆக்கிரமிப்பு செலுத்துகிறது.

ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்காக குடைகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தும் இந்த நிறுவனம், தரமான நுளம்பு வலைகள், மழைக் கோர்ட்டுகள் மற்றும் காலுறைகளையும் உற்பத்தி செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் நுகர்வோர் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்து தமது உற்பத்திகளை விரிவுபடுத்தியுள்ளது.

இந்த அனுசரணை இரு தரப்புக்கும் பயன்தருவதாக அமையவுள்ளது.

இதில் நாட்டின் முன்னணி வர்த்தகக் குறியீட்டின் ஆதரவு மூலம் திரித்துவக் கல்லூரி தனது ரக்பி விளையாட்டின் முன்னெற்றம் அதேபோன்று திறமையை வளர்த்துக்கொள்வதோடு, தனது பாடசாலை ரக்பி பருவத்தில் கந்துரட்ட அம்ரெல்லா நிறுவனத்தின் பெயரைச் சுமந்த இளம் நட்சத்திரங்கள் வெற்றிகளை குவிப்பதை அந்த நிறுவனம் எதிர்பார்த்துள்ளது.

இலங்கையின் விளையாட்டுகளை ஊக்குவிப்பதில் முன்னணியில் உள்ள பெருநிறுவனத் தலைவராக கந்துரட்ட உள்ளது.

அந்த நிறுவனம் சிங்கள விளையாட்டுக் கழக கிரிக்கெட் அணிக்கு தொடர்ச்சியாக ஏழு ஆண்டுகளாக அனுசரணை வழங்குவதோடு TAFA (தாபித் அஹமது கால்பந்து அகடமி) அமைப்புக்கு அனுசரணை வழங்கி பல வகைகளிலும் உதவி வருகிறது.

Fri, 04/05/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை