ஓட்டமாவடியில் மணிக்கூட்டு கோபுரம் திறந்து வைப்பு

மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதியில் ஓட்டமாவடியில் அமையப்பெற்ற மணிக்கூட்டு கோபுரம் திறந்து வைக்கும் நிகழ்வும் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வும் அண்மையில் ஓட்டமாவடி பிரதான வீதியில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளர் ஐ.ரீ.அஸ்மி தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி மற்றும் பிரதி அமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிராமிய பொருளாதார அமைச்சின் ஐம்பத்தைந்து இலட்சம் ரூபா நிதியில் உள்ளுர் வடிவமைப்பாளர்களைக்கொண்டு மணிக்கூட்டு கோபுரம் அமையப்பெற்றுள்ளதுடன் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள இருபத்தெட்டு விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அழகுகலை தொழில் செய்யும் மூவருக்கு மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

விழா ஏற்பாட்டாளர்களால் மணிக்கூட்டு கோபுரம் அமைவதற்கு வடிவமைத்த கட்டிட கலைஞர்கள் மற்றும் அதிதிகள் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

கல்குடா தினகரன் நிருபர்

 

Mon, 04/01/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை