ஈச் விளையாட்டுக் கழகம் வெற்றி

தம்பலாகமம் பிரதேச செயலப் பிரிவுக்குட்பட்ட விளையாட்டுக் கழகங்களுக்கிடையே நடாத்தப்பட்ட வருடாந்த விளையாட்டு விழாவில் ஈச் விளையாட்டுக் கழகம் 44 புள்ளிகளைப் பெற்று 2019 ஆம் ஆண்டுக்கான பிரதேச சம்பியன் கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.

கழகங்களுக்கிடையிலான இறுதிப் போட்டிகள் கடந்த (29) ஆம் திகதி பிரதேச செயலாளர் ஜே.சிறிபதி தலைமையில் தம்பலாகமம் பொது விளையாட்டு மைதானத்தில் இடம் பெற்றன. இதில் 34 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

பிரதேச விளையாட்டு அதிகாரி கே.எம். ஹாரியின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்ற இந்த போட்டியில் 37 புள்ளிகளைப் பெற்ற முள்ளிப்பொத்தானை மத்திய விளையாட்டுக் கழகம் 2ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

குழு விளையாட்டுக்களான கிரிகெட்டில் போட்டியில் அறபா விளையாட்டுக் கழகமும் உதைப்பந்து மற்றும் எல்லே ஆகிய போட்டிகளில் ஈச் விளையாட்டுக் கழகமும் கரப்பந்து போட்டியில் முள்ளிப்பொத்தானை சிராஜ் விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டன. பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில் முள்ளிப்பொத்தான சிங்கள மகா வித்தியாலய விளையாட்டுக் கழகம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது.

இந்த விளையாட்டு விழாவில் மெய்வல்லுநர் சம்பியனாக அல்- இஸ்லாம் விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எம். முபீஸ் தெரிவு செய்யப்பட்ட அதேவேளை, பெண்கள் பிரிவில் இருந்து முள்ளிப்பொத்தானை சிங்கள மகா வித்தியாலய விளையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த எச் .ஈ . எஸ். சித்துமினி சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டார். இந்த விழாவில் கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர் என்.எம்.நபீஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கி வைத்தார்.

கிண்ணியா மத்திய நிருபர்

Tue, 04/02/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை