தவறான இடத்தில் உறுப்புகள்: 99 வயதுவரை வாழ்ந்த பெண்

மிக அரிதாக பிறக்கும்போதே உடல் உறுப்புகள் தவறான இடத்தில் இருந்தது தெரியாமல் உயிர்வாழ்ந்த பெண் ஒருவர் 99 வயதில் இயற்கை மரணமடைந்துள்ளார். கடந்த 2017 ஒக்டோபரில் உயிரிழந்த அமெரிக்காவின் ரோஸ் மாரி பென்ட்லி, தனது உடலை ஆய்வுக்காக போர்ட்லாண்ட் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்துள்ளார். அவரது உடல் பாகங்கள் இருக்க வேண்டிய இடத்தில் இல்லை என்பதை உடற்கூறு வகுப்பு மாணவர்கள் கண்டறிந்துள்ளனர். அவர் பல சத்திர சிகிச்சைக்கு முகம்கொடுத்தபோதும் இந்த நிலை கண்டறியப்படவில்லை.

இந்த நிலைமையில் பென்ட்லி நீண்ட காலம் உயிர்வாழ்ந்திருப்பது குறித்து மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவரது கல்லீரல், வயிறு மற்றும் பிற அடிவயிற்று உறுப்புகள் வலமிருந்து இடமாக இருப்பது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும் இதயம் மனித உடலின் சாதாரணமான இடப்பக்கத்தில் உள்ளது.

22,000இல் ஒருவர் இவ்வாறான நிலையில் பிறப்பதோடு, இந்த நிலை உயிராபத்துக் கொண்ட இதயப் பிரச்சினை மற்றும் ஏனைய அசாதாரண நிலைமைகளுக்கு காரணமாகும் என்று மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Thu, 04/11/2019 - 06:00


from tkn
Share on Google Plus

About Tamil News

Sri Lanka's most important Tamil news collector. We publish Tamil news from the trusted websites in the world.

0 comments:

கருத்துரையிடுக