கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் இரவு 8 மணி முதல் ஊரடங்கு

RSM
கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை பகுதிகளில் இரவு 8 மணி முதல் ஊரடங்கு-Sainthamaruthu Blast-Curfew Imposed Continue

கிழக்கு மாகாணத்தின் கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இன்று (30) இரவு 8.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இன்று (39) இரவு 8.00 மணியிலிருந்து நாளை (01) காலை 6.00 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாய்ந்தமருது, வொலிவேரியன் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (26) ஸஹ்ரானின் சகோதரர்கள் இருவர் மற்றும் அவரது தந்தை ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்த தாக்குதல்களை அடுத்து, அங்கு தொடர்ச்சியாக ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை, சம்மாந்துறை, சவளக்கடை ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தொடர்ச்சியாக பாதுகாப்பு பிரிவினால் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 04/30/2019 - 19:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை