ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ண உதைபந்தாட்டம் 80 ஆவது குழுவினருக்கு தலைவர் பாராட்டு

கொழும்பு ஹமீத் அல் - -ஹுசைனி கல்லூரி மாணவன் அப்கர் போட்ட அபார கோல் உதவியுடன் 2--1 என திஹாரி அல்- -அஸ்கர் கல்லூரியை வீழ்த்தி மகுடம் சூடியது.

கொழும்பு குதிரைப்பந்தயத் திடலில் அண்மையில் மின்னொளியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஹமீத் அல்- - ஹுசைனி கல்லூரி சம்பியன் பட்டத்தை சூடி ஒக்ஸ்போர்ட் ஜனாதிபதி கிண்ணத்தை சுவீகரித்தது. கொழும்பு ஹமீத் கல்லூரியின் 80 ஆவது குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 12 ஆவது பாடசாலைகள் உதைபந்தாட்ட போட்டியின் இறுதி ஆட்டம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சுற்றுப் போட்டியை வெற்றிகரமாக நடத்த உதவிய 80 ஆவது குழுவின் தலைவர் பைஸால் புஹாரி நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார்.

தங்களது குழுவின் அர்ப்பணிப்பான செயற்பாட்டின் மூலம் இந்த உதைபந்தாட்ட சுற்றுத் தொடர் இனிதே நிறைவு பெற்றது.

அதற்காகவும் எமது குழுவுக்கு பாராட்டுக்கள்.

நாங்கள் எமது குழுவின் இடைவிடா முயற்சி காரணமாக அனுசரணையாளர்களை அணுகி இந்த தொடருக்கு அனுசரணை பெற்றுக் கொண்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த ஏற்பாட்டுக்குழுவில் ரம்ஸான் இப்றாகிம்,பவாஸ் காதர்,பஸ்மின் பாயிஸ்(செயலாளர்),பைஸால் புஹாரி, (தலைவர்) ஆதில் அபூபக்கர், சுஜாப்தீன் ஷெரிப்,றில்வான் ஆதம், மொஹம்மத் முர்ஷித், பைஸால் பாறூக், சப்ராஸ் பைஸால், அர்ஷாத் ஜஃபர், மொஹம்மத் ஹிமாஸ் மொஹம்மத் முஸப்பீர், சாஹூல் ஹமீத்,மொஹம்மத் ஹஸாத், இர்ஷாத் காமீல்,மொஹம்மத் ஸஹார், அலி சப்ரி, றிக்காஸ் பௌஸி, பவீக் நஜீம், மொஹம்மத் றிபாத், நிஸாம் இல்யாஸ், மொஹம்மத் சிபித்தி, றம்ஸி மொஹைதீன், சிராஸ் நஜ்முதீன், முஹாத் ரம்ஸான், இர்பான் பாறூக் மொஹமத் அனஸ் ஆகியோர் எங்களது அமைப்பின் தூன்கள் என்றால் மிகையாது என்றும் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் எங்களது இந்த உதைபந்தாட்ட தொடர் தொடர்பாக சகல ஊடகங்களிலும் செய்திகளை பிரசுரிக்க உதவிய அனைத்து ஊடகவியாளர்களுக்கும் நன்றிகள் என தெரிவித்தார்.

Thu, 04/18/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை