எபோலா வைரஸ் பாதிப்பால் கொங்கோவில் 600 பேர் பலி

மத்திய ஆபிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இதுவரை 600 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏபோலா வைரஸால் அந்நாட்டில் ஏற்பட்ட தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு இதுவாகும்.

“கொங்கோவின் மத்தியப் பகுதிகளில் எபோலா வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஏற்பட்டது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 1,041 பேருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று ஐ.நா வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகள் மூலம் கிட்டதட்ட 70,000 பேருக்கு மேல் இந்த நோய் பரவல் தடுக்கப்பட்டுள்ளதாக கொங்கோ அரசு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர், கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் மேற்கு ஆபிரிக்க நாடுகளான கினி, லைபீரியா, சியாரலியோன் உட்பட 8 நாடுகளில் எபோலா வைரஸ் பரவியது.

இதில் எபாலோ வைரஸ் பாதிப்பால் 15,145 பேர் பாதிக்கப்பட்டனர். இதில், 11,000 பேர் உயிரிழந்தனர்.

Wed, 04/10/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை