தோற்கடிக்கப்பட்ட அமைச்சுகளுக்கு 5ஆம் திகதிக்கு முன் நிதி ஒதுக்கீடு

எதிரணி எதிர்த்தால் எதுவும் செய்ய இயலாது

உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் செலவுத் தலைப்புகளையே எதிரணி தோற்கடித்துள்ளது. 5 ஆம் திகதிக்கு முன்னர் அந்த நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்க தேவையான நடவடிக்கை எடுக்காவிடின் அவற்றுக்கு நிதி கிடைக்காமல் போகும். 5 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றுக்கு நிதி ஒதுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அரசு தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஆனால் பொது எதிரணி இதனை எதிர்த்தால் எமக்கு எதுவும் செய்ய முடியாது என்று குறிப்பிட்ட அவர், முக்கிய அமைச்சுகளை தோற்கடிக்கவே எதிரணி முயலும் என எதிர்பார்த்தாலும் தமக்கு பெரும்பான்மை பலமுள்ள சபைகளுக்கான நிதி ஒதுக்கீட்டையே அவர்கள் தோற்கடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

ஹோமாகம நகரப் பூங்கா திறப்பு, தொழில்நுட்ப நகருக்கான நுழைவாயிலுக்கான அடிக்கல் நடல் மற்றும் மகரகமவில் பல மாடிகளை உடைய வாகனத் தரிப்பிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு (02) இடம்பெற்றது.இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்தவருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்து எதிர்க்கட்சியினர் அந்நிறுவனங்களின் ஆட்சியை கைப்பற்றினார்கள். அந்நிறுவனங்கள் மூலம் பாரிய பணிகள் நிறைவேற்றப்படும் என மக்கள் நம்பினார்கள்.

அரசாங்கம் என்ன செய்துள்ளது? எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என குற்றஞ்சாட்டி 2018ல் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அவர்கள் அவ்வாறு கூறிய அனைத்திலும் ஒரு வருடங்களில் எல்லாம் பிரிவுகளிலும் நாம் முன்னேற்றம் அடைய தொடங்கியுள்ளோம்.

மாநகரங்கள், வீடமைப்பு , வர்த்தக வலயங்கள் தொடர்பாக சரியான தகவல்களைப் பெற்று திட்டமிட்டு செயல்பட்டதால் அதன் பலனை அடைந்துள்ளோம்.

ஆனால் நகர சபை மற்றும் பிரதேச சபைகளுக்கு என்ன நடந்துள்ளது. அந்நிறுவனங்கள் எவ்வித திட்டமும் இன்றி செயல்பட்டதனால் நடந்தது என்னவென்று தெரிகின்றதல்லவா? ஆனால் நகர சபைகள் , எதிர் கட்சியினருக்கும் பிரதேசசபைகள் வேண்டாமென்று நிலையே காணப்படுகின்றது. எதிர்க்கட்சிக்கு சொந்தமான உள்ளூராட்சி நிறுவன வேலைகளை செய்யவில்லை என எதிர்க்கட்சியே இன்று கூறுகின்றது.

வரவு செலவு திட்டத்தில் அரசாங்க கட்சிகளுக்கு போன்று எதிர்க்கட்சியினரின் நடவடிக்கைகளுக்கும் நிதி ஒதுக்கப்படும். வரவு செலவு திட்டத்தில் சாதாரணமாக எதிர்க் கட்சி, ஆளும் கட்சியினருக்கு ஒதுக்கப்படும் நிதியை குறைக்கவே முயற்சி செய்யும். ஆனால் இம்முறை அது முற்றிலும் மாறுபட்டே நடந்தது.

வரவு செலவுத் திட்டம் தொடர்பாக விவாதம் நடத்தி, வாக்கெடுப்பு நடத்தி எதிர்க்கட்சிக்கு பெரும்பான்மை பலமுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதியை எதிர்க்கட்சியினரே தொல்வி அடையச் செய்துள்ளார்கள். இதிலிருந்து அவர்களுக்கு அதிகாரம் உள்ள நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் தொடர்பாக விரக்தியில் உள்ளார்கள் எனத் தெரிய வருகின்றது.

ஆனால் அந் நிறுவனங்களுக்கு அவசியமான நிதியை பெற்றுத்தர தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு அந்நிறுவனங்களின் தலைவர்கள் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.

ஆனால் ஏப்ரல் 05 ஆம் திக்கு முன்னர் நாம் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நகர சபைகளுக்கும் பிரதேச சபைகளுக்கும் தேவையான நிதி கிடைக்காமற் போய்விடும். எவ்வாறாயினும் ஏப்ரல் 06 ஆம் திகதி அந்நிதியை பெற்றுக்கொடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாம் தயாராகவுள்ளோம். ஆனால் பொது எதிர்க் கட்சியினர் இதற்கு எதிராக செயற்பட்டால் எம்மால் எதுவும் செய்ய முடியாது.

வரவு செலவு திட்டத்தின் போது நாம் அரசாங்கத்தின் பாரிய அழுத்தமுள்ள அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடுதான் எதிர் கட்சியால் தோல்வியடையச் செய்யப்படுமென நம்பினோம். ஆனால் அவர்கள் எதிர்க் கட்சிக்கு பெரும்பான்மையுள்ள உள்ளுராட்சி நிதி ஒதுக்கீட்டையே தோல்வியடையச் செய்தார்கள்.

மா நகரங்களின் அபிவிருத்திக்கு இந்த அரசாங்கத்தால் மாத்திரம் தான் தலைமை வகிக்க முடியும். இதற்கு முன்னர் இருந்த நிர்வாகத்தின் கீழ் நடந்தது என்ன? அவர்கள் கடனை மாத்திரமே வாங்கினார்கள். ஆனால் தற்போதைய அரசாங்கம் அந்த அனைத்து கடனையும் செலுத்தி புதிதாக பாரிய திட்டங்களை ஆரம்பித்துள்ளது என்றார்.

 

Thu, 04/04/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை