பிரதமர் -46 வெளிநாட்டு தூதுவர்களுடன் சந்திப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய குழப்பகரமான சூழ்நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் 46 வெளிநாட்டு தூதுவர்களுக்கும் இடையில் விசேட சந்திபொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை மாலை அலரிமாளிகையில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் நாட்டில் பல்வேறு இடங்களிலும் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அடுத்தகட்டமாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்புச் சம்பவங்களால் இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்வதற்கு சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவங்களால் இலங்கையின் பொருளாதாரத்திற்கும் பெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இவற்றிலிருந்து மீள்வது குறித்தும் நாட்டை கட்டியெழுப்புவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

சம்பவங்களுக்கு காரணமான தரப்பினரை கைதுசெய்யவும் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பூரண அதிகாரம் பாதுகாப்புத்துறைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 24 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதன்போது வெளிநாட்டு தூதுவர்களிடம் கூறியுள்ளார். அத்துடன் இந்தத் தீவிரவாதத் தாக்குதலுடன் சர்வதேச தீவிரவாதக் குழுக்கள் தொடர்புப்பட்டிருந்தால் சர்வதேச ஒத்துழைப்புகளைப் பெற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் பிரதமர் தூதுவர்களிடம் எடுத்துரைத்துள்ளார்.

Tue, 04/23/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை