மும்பை 40 ஓட்டங்களால் வெற்றி

ஐ.பி.எல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்சை வென்றது.

ஐதராபாத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸின் அனல் தெறிக்கும் பந்துவீச்சில் தடுமாற்றம் கண்டது.

அந்த அணி 65 ஓட்டங்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. கடைசி கட்டத்தில் பொலார்ட் அதிரடியாக 26 பந்தில் 46 ஓட்டங்களை விளாசி ஆட்டமிழக்காமல் இருக்க மும்பை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்கள் சேர்த்தது.

இலகுவான இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணியினர் விக்கெட்டுகளை முக்கிய இடைவெளியில் பறிகொடுக்க 17.4 ஓவரில் 96 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்போது அல்சாரி ஜோசப் 3.4 ஓவர்களில் 12 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Mon, 04/08/2019 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை